உள்ளடக்கத்துக்குச் செல்

சயீதா பானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சயீதா பானு (பிறப்பு) 1920 லக்னோவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்தியாவின் முதல் (முஸ்லிம்) பெண் வானொலி அறிவிப்பாளர். வானொலியில் நீண்டகாலமாக அறிவிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

1920 லக்னோவில் பிறந்த சயீதா பானு, தன்னுடைய 17 வயதில் அப்பாஸ் ரஸா என்ற லக்னோ நீதிமன்ற நீதிபதிக்கு மணமுடித்து வைக்கப்பட்டார். திருமணத்தின் மூலம் அவருக்கு இரு குழந்தைகளும் பிறந்து, 1947ம் ஆண்டு அவர்களுக்கு விவாகரத்தான நிலையில், சயீதா குழந்தைகளுடன் டெல்லிக்கு குடிப்பெயர்ந்தார். .[1]

வானொலி செய்தி வாசிப்பாளர்

[தொகு]

முன்னதாக லக்னோவில் ஒரு தனியார் வானொலி நிலையத்தில் உருது செய்தி வாசிப்பாளராக இருந்த அனுபவத்தைக்கொண்டு, டெல்லி, அனைத்திந்திய வானொலி நிலையத்திற்கு பணிக்கான மனுவை எழுதியிருந்தார். பதில் வராத நிலையில் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை அமைக்க துணையாக இருந்த அரசியல் ஆளுமையுமான விஜயலட்சுமி பண்டிட் அவர்களுக்கு நேரடியாக மனு அனுப்பி தமக்கு பணி நியமனம் கேட்டிருந்தார். நாடு சுதந்திரம் அடைவதற்க்கு சரியாக இரண்டு நாட்கள் முன்னதாக 13-8-1947 அன்று அவருக்கு உருது செய்தி வாசிப்பு பிரிவில் வேலை கிடைத்தது அனைத்திந்திய வானொலியில் செய்தி ஒளிபரப்பாளராக சேர்ந்தார், உருதுவில் செய்திகளைப் படித்து இந்தியாவின் முதல் தொழில்முறை பெண் செய்தி ஒலிபரப்பாளரானார். நாடு சுதந்திரமடைந்த செய்தியை உருதுவில் அறிவித்தவரும் இவரே.[2], .[3], [4]

செய்தி வாசிப்பாளர் என்கிற பொறுப்புடன், மக்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சித்தொகுப்பாளர் என்கிற கூடுதல் பொறுப்பும் சயீதா பானுவிற்கு கொடுக்கப்பட்டது. அன்றைய காலத்தில் வானொலி நிலையங்களுக்கு நேரடியாக வந்து கஸல், தும்ரி மற்றும் இந்துஸ்தானி இசைப்பாடல்களை பாடுவது வழக்கமாக இருந்தது, இதனை முதன்முதலில் ஏற்பாடு செய்தவரும் சயீதா பானு அவர்களே ஆவார்.

மறுமணம்

[தொகு]

சயீதா பானு, வழக்குறைஞர் நூருத்தீன் அஹமது என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார், நூருத்தீன் அஹமது அவர்கள் மூன்று முறை டெல்லியின் மேயராக இருந்து பணி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.[5]


மேற்கோள்கள்

[தொகு]
  1. Najib, Rihan. "To end the news, the headlines again: The life and times of Saeeda Bano". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-04.
  2. Haziq, Saman. "WKND Conversations: India's first female radio newsreader 'lived life on her own terms'". Khaleej Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-04.
  3. Bano, Saeeda (2020-10-14). "Saeeda Bano, first woman Urdu news reader who got marriage offers and 'go to Pakistan' letters". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-04.
  4. Bano, Saeeda (2020-10-14). "Saeeda Bano, first woman Urdu news reader who got marriage offers and 'go to Pakistan' letters". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-04.
  5. Dasgupta, Sucheta (2020-12-06). "'Even forthright women can be submissive'". The Asian Age. பார்க்கப்பட்ட நாள் 2021-03-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சயீதா_பானு&oldid=3891932" இலிருந்து மீள்விக்கப்பட்டது